மீண்டும் இஸ்ராயேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட மறு ஆண்டில் இரண்டாம் மாதம் முதல் நாள், ஆண்டவர் சீனாய்ப் பாலைவனத்தில் இருந்த உடன்படிக்கைக் கூடாரத்திலே மோயீசனை நோக்கி:
இரண்டாம் மாதம் முதல் நாள் (பொதுக்) கூட்டங் கூட்டி, ஆடவரெல்லாரையும் அவரவருடைய வம்சம் வீடு, குடும்பம், ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி எழுதி, இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்களையும் எண்ணிப் பார்த்தனர்.
இஸ்ராயேலுடைய மூத்த புதல்வனான ரூபனின் கோத்திரத்தில், அவரவருடைய வம்சம், குடும்பம், வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க ஆடவரின் எண்ணிக்கை,
காத்தின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை,
யூதாவின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை,
இசாக்காரின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை,
சாபுலோனின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை,
சூசையுடைய புதல்வருக்குள் எபிராயீமின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
மனாசேயுடைய புதல்வரின், அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்கப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
பெஞ்சமினுடைய புதல்வரிலே, அவரவரருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயதுமுதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
தானுடைய புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
ஆசேருடைய புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயதுமுதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
நெப்தலியுடைய புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயதுமுதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
அவர்களைச் சாட்சியக் கூடாரத்தையும், அதனில் பயன்படும் எல்லாத் தட்டுமுட்டுகளையும், சடங்கு முறைகளுக்கு அடுத்தவைகளையும் கவனிக்கும்படி ஏற்படுத்து. அவர்களே கூடாரத்தையும் அதன் எல்லாப் பொருட்களையும் சுமந்து போகவும், ஊழியம் புரியவும் கடவார்கள். அவர்கள் கூடாரத்தைச் சுற்றிலும் பாளையம் இறங்குவார்கள்.
புறப்பட வேண்டிய போது லேவியரே கூடாரத்தைப் பிரித்து வைப்பார்கள். பாளையம் இறங்க வேண்டியிருக்குங்கால், அதை அவர்களே நிறுவி வைப்பார்கள். அந்நியன் எவனேனும் அதன் அருகே வந்தால் அவன் கொல்லப்படுவான்.